Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 19 ஜனவரி (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் தை
மாத அமாவாசை முன்னிட்டு அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள்,
குங்குமம், பன்னீர் மற்றும் வாசனை திரவங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பல வண்ண
மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உற்சவம் அங்காளம்மனுக்கு பல வண்ண மலர்கள் மற்றும்
காய்கனிகளைக் கொண்டு அம்மனுக்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து
தீபாராதனை காட்டப்பட்டது,
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்த உற்சவ
அங்காளம்மன் நல்லிரவில் பூசாரிகள் மேளதாளங்கள் முழங்க அம்மனை வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மேடைக்கு கொண்டு சென்று அம்மனுக்கு தாலாட்டு பாடல் பாடி ஊஞ்சல் ஆற்றினர், ஊஞ்சல் மண்டபம் எதிரே இருந்த
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரதேங்காயில் கற்பூரம் தீபம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
இந்நிகழ்வுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்
ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
பக்தரின் பாதுகாப்பிற்காக சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam