Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)
தேசிய பேரிடர் மீட்புப் படை என்பது இந்தியாவில் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் ஒரு சிறப்புப் படையாகும், இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த படையின் நிறுவன தினம் இன்று (ஜனவரி 19) கொண்டாடப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நெருக்கடியான தருணங்களில் தங்கள் தொழில்முறைத் திறனாலும் உறுதியாலும் உயர்ந்து நிற்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எங்களின் ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு பேரிடர் ஏற்படும்போது எப்போதும் முன்னணியில் நிற்கும் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள், மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் உயிர்களைப் பாதுகாக்க, நிவாரணம் வழங்க மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க அயராது பாடுபடுகிறது. அவர்களின் திறமைகளும் கடமையுணர்வும் மிக உயர்ந்த சேவைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பல ஆண்டுகளாக, தேசிய பேரிடர் மீட்புப் படை பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்புப் பணிகளில் ஒரு முன்மாதிரியாக உருவெடுத்து, சர்வதேச அளவில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b