Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)
போலந்து வெளியுறவு அமைச்சரும், அந்நாட்டின் துணை பிரதமருமான ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியா வந்துள்ளார்.அவர், இன்று (ஜனவரி 19) புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை முழுவதும் ஆதரிக்கிறோம்.
பயங்கரவாத முயற்சி மற்றும் வன்முறை ஆகியவற்றால் போலந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வரி என குறிப்பிட்டு மிரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஐரோப்பாவில் உள்ள நாங்களும் இதனை உணர்ந்துள்ளோம்.
இந்தப் பிரச்னை சர்வதேச வர்த்தகத்தை கொந்தளிக்கச் செய்யும் என அஞ்சுகிறோம். ஐரோப்பாவுடன் தொடர்ந்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐரோப்பாவில் அனைத்து நாடுகளிலும் தூதரகம் ஏற்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்துள்ளோம்.
இது ஐரோப்பிய யூனியனுடனான உறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது கூறியதாவது,
நிச்சயமாக தேர்வு செய்யப்பட்ட இலக்கு என நிர்ணயிக்கும் செயல்முறை வரிகளுடன் மட்டும் நின்று போவதில்லை. இது மற்ற வடிவங்களிலும் உள்ளது என நினைக்கிறேன். இது குறித்து விவாதிக்க வேண்டும்.
உலகம் குழப்ப நிலையில் உள்ள சூழ்நிலையில் நாம் சந்தித்துள்ளோம். இரண்டு வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் நமக்கு என சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து கருத்துகள் பரிமாறி கொள்ளப்பட வேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வளர்ந்து வருகிறது. கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி போலந்து சென்ற போது நமது உறவு பிராந்திய கூட்டாளி தன்மையை அடைந்தது. வர்த்தகம் முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை இன்னும் முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் வலிமையான பொருளாதார வளர்ச்சி, சந்தைகளின் அளவு மற்றும் முதலீட்டுக்கு ஆதரவான கொள்கைகள் ஆகியவை போலந்து வணிகத்துக்கு ஏற்ற வகையில் உள்ளன. மக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் மற்றும் கடந்த ஜனவரி மாதம் பாரிசில், உக்ரைன் மோதல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த இந்தியாவின் கருத்துகளை எடுத்துரைத்தேன். அப்போது இந்தியாவை மட்டும் விமர்சனம் செய்வதை நியாயமற்றது மற்றும் அநியாயமானது. இன்றும் அதனை கூறுகிறேன்.
பயங்கரவாததை போலந்து சகித்துக் கொள்ளக்கூடாது. தனது அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு தரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b