Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை,19 ஜனவரி (ஹி.ச)
புதுக்கோட்டை மாவட்ட வடவாளம் ஊராட்சி புனித அந்தோனியார் ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முக்காணிப்பட்டி பகுதியில் இன்று நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஐந்து சுற்றுகளாக நடைபெற்ற முதலில் வாடிவாசல் இருந்து ஊர் கோவில் காளை வாடிவாசலில் விடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர் இந்நிகழ்ச்சியை பிற்படுத்தப்பட்ட ஒரு நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் வட்டாட்சியர் செந்தில் நாயகி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கேகே செல்லபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வடவாளம் ஊராட்சி மன்ற தலைவர் மதிமுக ஒன்றிய செயலாளர் சூரிய பிரகாசம் மற்றும் முக்காணிப்பட்டி ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தனர்.
இப் போட்டியில் வெற்றி பெறும் மாடுகளுக்கும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் மதிமுக ஒன்றிய செயலாளர் சூரிய பிரகாசம் சிறந்த மாடுபிடி வீரருக்கு இரண்டு சக்கர வாகனத்தை பரிசாக வழங்கப்பட்டது.
மற்றும் போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சார்பாக பரிசுகள் ஏராளமாக வழங்கப்பட்டது.
போட்டியினை கண்டு ரசிப்பதற்காக முக்காணிப்பட்டி ஊர் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியின் கண்டு ரசித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ