Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரபிரதேசம், 19 ஜனவரி (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அப்போதைய பா.ஜ.க. தலைவராக இருந்த அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி, ராகுல் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்கு தலா ரூ.25,000 மதிப்புள்ள இரண்டு பிணைகளில் நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரேபரேலி எம்பியான ராகுல்காந்தி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவிருந்தார்.
இருப்பினும் அவர் கேரளத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்குரைஞர் காசி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்பி-எல்எல்ஏ நீதிமன்ற நீதிபதி சுபம் வர்மா, ராகுல்காந்தி நேரில் ஆஜராக இறுதி வாய்ப்பளித்து, அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam