Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 19 ஜனவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடல்அட்டை மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் ஏராளமானவை கடத்திச் செல்லப்படுகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் திருப்புல்லாணியை அடுத்த தோப்பு வலசை மீனவ கிராம கடற்கரையில் நடத்திய திடீர் சோதனையின் போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக படகை எதிர்பார்த்து கடற்கரை ஓரத்தில் பதுக்கி வைத்திருந்த 116 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து இராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
இதை கடத்துவதற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் எங்கிருந்து கஞ்சா பண்டல்கள் கடத்திவரப்பட்டன என்பது குறித்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN