Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன.
தி.மு.க., அ.தி.மு.கவினர் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளனர்.
அதே போல் த.வெ.க. சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அக்கட்சி நிர்வாகிகள் அருண்ராஜ், ராஜ்மோகன் என மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். இந்த குழு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை யில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளை பெறுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b