கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் -சிபிஐ முன்பு 2-வது முறையாக தவெக தலைவர் விஜய் இன்று ஆஜர்
புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச) கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27ல் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதிக்கட
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் -சிபிஐ முன்பு 2-வது முறையாக தவெக தலைவர் விஜய் இன்று ஆஜர்


புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச)

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27ல் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.

டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில், விஜய் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். விஜய்யிடம் விசாரணை முடியாத நிலையில், பொங்கலுக்கு பின் விசாரணைக்கு ஆஜராவதாக சி.பி.ஐ., அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், ஜனவரி 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பினர். அதை ஏற்றுக்கொண்ட விஜய், இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் நேற்று

(ஜனவரி 18) டில்லி சென்றார்.

அங்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று (ஜனவரி 19) சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார்.

இன்று மாலை வரை விசாரணை நடத்தவும், பல்வேறு கேள்விகளை எழுப்பவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாள் விசாரணைக்கு வந்தது போலவே இன்றும் விஜய் கார் சிபிஐ அலுவலகத்தின் போர்டிகோ வரை சென்று நிறுத்தப்பட்டது.

காரில் கண்ணாடி பொருத்தி மறைத்து இருந்ததால் பத்திரிகையாளர்கள் யாரும் படம்பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b