சென்னை  திரும்பும் பொதுமக்கள் - சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி14 முதல் 18ம் தேதி வரை தொடா்ச்சியாக 5 நாட்கள் தமிழக அரசு விடுமுறை அளித்தது.பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னையில் கல்வி, தொழில், வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களத
சென்னை  திரும்பும் பொதுமக்கள் - சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்


சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி14 முதல் 18ம் தேதி வரை தொடா்ச்சியாக 5 நாட்கள் தமிழக அரசு விடுமுறை அளித்தது.பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னையில் கல்வி, தொழில், வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

சொந்த ஊர் சென்ற மக்களின் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

இந்த நிலையில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மதியம் முதலே சென்னை நோக்கி பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இன்று (ஜனவரி 19) காலை ஒரே நேரத்தில் பலரும் சென்னைக்குத் திரும்புவதால் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இருப்பினும், அதை தாண்டி சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பெருமாள் கோவில் அருகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

ஜிஎஸ்டி சாலையில் வண்டலூா், பெருங்களத்தூா், தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b