Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 19 ஜனவரி (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள மால்வாய் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அய்யனார், பிடாரியார் மற்றும் கருப்பண்ணசாமி கோவிலில், இந்து சமய அறநிலைத்துறை உதவியுடன் 500 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
உண்டியல் காணிக்கைகளை அபகரிப்பு செய்துள்ளதை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்டு கோவில் சொத்துக்களை கபலிகரம் செய்த அறநிலையத்துறை உடனடியாக வெளியேற வேண்டும்.
மேலும் அறநிலைத்துறை உதவி ஆணையர் மற்றும் அறங்காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மால்வாய் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் குடிப்பாட்டு காணிமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றனர்.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தற்போது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / ANANDHAN