உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் துவங்கிய உறைபனி பொலிவு
நீலகிரி, 19 ஜனவரி (ஹி.ச.) மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும். கடந்த சில நாட்
உறைபனி


நீலகிரி, 19 ஜனவரி (ஹி.ச.)

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி

வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி

ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும்.

கடந்த சில நாட்களுக்கும் முன் -4 டிகிரி அளவு காணப்பட்ட நிலையில் உதகையின் பல

இடங்களில் உறைபனி பொலிவு காணப்பட்டது.

இதை காண சுற்றுலா பயணிகள் குவிந்து

வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததின்

காரணமாக உறைபனி சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் உறைபனி சீசன்

துவங்கி உள்ளது.

காந்தல், தலைகுந்தா மற்றும் உள்ள சதுப்பு நில பகுதிகளில் உறைபனி பொலிவால் 2டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்த வெப்பநிலை காணப்பட்டது.

இதனால் புல்வெளிகள் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்பட்டது.

மேலும் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது .

Hindusthan Samachar / GOKILA arumugam