Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று (ஜனவரி 19) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னையில் 19.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
வியாசர்பாடி: செட்டிமேடு, காத்தகோழி, சங்கீதா நகர், ஜெயராஜ் நகர்,பாய் நகர், மகாவீர் எஸ்டேட், குமார் ராஜன் நகர், திருப்பதி நகர், சுந்தர விநாயகர் கோவில் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், கேவிடி, தனலட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், சந்தோஷ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b