Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 02 ஜனவரி (ஹி.ச.)
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது அணை பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சி.
போடிநாயக்கனூரில் உள்ள முக்கிய நீர்ப்பாசன கண்மாயிகள் குளங்களான பங்காரு சாமி குளம், செட்டிகுளம், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்வாய் போன்றவைகளின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக விளங்கும் இந்த தடுப்பணை நீர்வீழ்ச்சியின் உபரி நீர் கொட்டக்குடி ஆறு வழியாக வைகை அணை செல்கிறது .
தற்போது போடிநாயக்கனூரை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, பிச்சாங்கரை, ஊத்தாம்பாறை, போடி மெட்டு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போடிநாயக்கனூர் சுற்றியுள்ள மேற்கு
தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கொட்டகுடி ஆறு கொம்பு
தூக்கி ஆறு புலியூத்து அருவி பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் போடிநாயக்கனூரை சுற்றியுள்ள கண்மாய் கள் குளங்களின் முக்கிய நீர்வரத்து பகுதியான அணைப் பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சி பகுதியில் தொடர்ந்து
நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தடுப்பணைகளைத் தாண்டி காட்டாற்று வெள்ளம்
சீறிப்பாய்ந்து செல்கிறது.
இன்று விடுமுறை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காரணமாக சாரல் மழையிலும் தடுப்பணை பகுதிகளுக்கு ரீல்ஸ் எடுக்கவும் செல்பி
எடுக்கவும் வருகைதரும் நிலையில் தடுப்பணைகளை தாண்டி சிறுசிறு மரக்கட்டைகள்
கற்களுடன் மற்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வெள்ள நீரில் இழுத்துவரப்
படுவதால் தடுப்பணை பகுதிக்குள் யாரும் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கை.
விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam