ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்!
சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.) நேற்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இன்று மதியம் சென்னை வந்த
ஜெய்சங்கர்


சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.)

நேற்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் இன்று மதியம் சென்னை வந்தடைந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

சென்னையில் உள்ள ஐஐடி கிண்டி வளாகத்தில் அமைந்துள்ள ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

இதைனை தொடர்ந்து, இரண்டு வார சாஸ்திரம் மற்றும் சாரங் விழாக்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

மேலும் பல முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக, மலேசியா, ஜெர்மனி, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J