Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 ஜனவரி (ஹி.ச.)
மதுரை, திருவனந்தபுரம் ரயில் கோட்டங்களில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் இந்த மாதம் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. இதையொட்டி குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜன.7 முதல் 10ம் தேதி வரையும், 12ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் கோட்டயம் மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வந்தடையும். எர்ணாகுளம், ஆலப்புழா ரயில் நிலையங்களுக்கு செல்லாது.
இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரயில் ஜன.9 மற்றும் 16, 23ம் தேதிகளில் கோட்டயம் மாற்றுப்பாதை வழியாக திருவனந்தபுரம் செல்லும். எர்ணாகும், ஆலப்புழா செல்லாது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஜன.3, 10 ஆகிய தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும்.
இதே ரயில் ஜன.5, 7, 14ம் தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகவும், 8, 12ம் தேதிகளில் 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாகவும், 9, 13 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் தாமதமாகவும், 16ம் தேதி 20 நிமிடம் தாமதமாகவும், 20, 23, 26 தேதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாகவும் குருவாயூர் சென்றடையும்.
அதேபோல், மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூரில் இருந்து ஜன.1ம் தேதி முதல் 30ம் தேதி வரை
(6, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 27 ஆகிய தேதிகள் தவிர) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
இது தொடர்பான விவரங்களை ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில்வே அதிகாரபூர்வ இணையதளம், என்.டி.இ.எஸ். செயலி மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b