Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.)
அரசு நிலம், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும் தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கோரி துரை சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுதாரர் புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி ஆணையருக்கு,
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ