Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 02 ஜனவரி (ஹி.ச.)
கடலூர் உள்ள உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலானது பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆணி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும்.
இந்த திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளிநாட்டினர் என பல்லாயிரக்கணக்கானோர் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தேர்த்திருவிழா இன்று
(02-01-26) காலை 8 மணி முதல் விமர்சியாக நடைபெற்றது. இதில் விநாயகர், முருகன், நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்தல் நகரின் முக்கிய வீதிகள் ஆன கீழவீதி, மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி வழியாக சென்று இன்று மாலை 7 மணி அளவில் கோயில் கீழ வாசல் அருகே தேர் நிலையை அடைந்தது.
தேரில் இருந்து சாமி சிலைகளை இறக்கி ஆயிரங்கள் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லும் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதனை காண்பதற்கு காத்திருப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று இரவு லட்சார்ச்சனை பூஜை நடைபெறும்.
இதனை தொடர்ந்து நாளை அதிகாலை மகா அபிஷேகம் நடைபெறும். இதனையொட்டி நாளை மதியம் 2 மணிக்கு நடராஜர் சிவகாமசுந்தரி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி தரிசனமாக நடைபெறும் இதனை சிவ பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.
Hindusthan Samachar / vidya.b