உலகளவில் கடும் போட்டி நிலவும் நிலையில் பட்டம் பெற்றால் மட்டும் போதாது , மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்
சென்னை, 02 ஜனவரி (ஹி.ச) சென்னை வானகரத்தில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 5 ஆயிரத்து 500 க்கும்
Cpr


சென்னை, 02 ஜனவரி (ஹி.ச)

சென்னை வானகரத்தில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

5 ஆயிரத்து 500 க்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் வழங்குவதன் அடையாளமாக , பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற 20 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் பட்டங்களை வழங்கினார்.

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தனது மகள் மகப்பேறு அறுவை சிகிச்சைக்கான முதுகலை பட்டம் பெற்ற நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பட்டங்களை வழங்கிய பின் மேடையில் உரையாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரை,

புத்தாண்டு பிறந்துள்ளது , எந்த புத்தாண்டாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

சென்னை போன்ற ஒரு மாநகரில் புத்தாண்டின் பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி . சென்னை என்றாலே ஒரு பாரம்பரியம் உண்டு. புதிய மாற்றங்களை ஏற்க எப்போதும் தயாராக உள்ள நகரம் சென்னை.

34 வது பட்டமளிப்பு விழா என்பது பல்கலையின் வளர்ச்சியில் முக்கியமானது. ஒருநாளில் உருவான பல்கலை அல்ல இது. தொடர் உழைப்பால் உருவானது. மாணவர்களாகிய உங்களின் வாழ்வின் மிக முக்கியமான நாள் இது. பட்டதாரிகளாகிய உங்களுக்கு புதிய தொடக்கம் இது.

கடுமையான நேரங்களை ஒவ்வொரு மனிதனும் சந்தித்துதான் ஆக வேண்டும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறிதான் வரும். காலையில் உதிக்கும் சூரியன் மாலையில் மறைந்து விடும் என்பதே எதார்த்தம். அதுபோல வெற்றியை மட்டுமே பெற்று வர முடியாது. இரவையும் பகலையும் போல வெற்றி தோல்வி மாறிமாறித்தான் வரும்.

தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. வெற்றியை காட்டிலும் அதிக அனுபவத்தை தருவது தோல்வி.

வெற்றி தோல்வி மாறிமாறித்தான் வரும். எதையும் தாங்கும் மன உறுதியை பெற்றால் மகத்தான வெற்றியை பெற முடியும்.

ஏ.சி.சண்முகம் கடும் உழைப்பால் இந்த ஆலமரம் போன்ற பல்கலையை உருவாக்கி உள்ளார். நான் ஒரு இயக்க தலைவராக இருந்தபோது எனது வீடும் , அவரது வீடும் அருகருகே இருந்தது.

மாணவர்கள் பட்டம் பெற்றால் மட்டும் போதாது , இன்று உலகளவில் கடும் போட்டி நிலவுகிறது. மாற்றங்கள் தினம் தோறும் வருகிறது. ஏ.ஐ போன்றவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. ஏ.ஐ காரணமாக தொழில்நுட்பங்கள் அனைத்தும் மாறப் போகின்றன. அந்த மாற்றம் பகலுக்கும் இரவுக்கும் இடையில் இருக்கும் மாற்றத்தை போல இனிவரும் நாட்களில் நிகழ இருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது.

விஞ்ஞான அறிவை ஒவ்வொரு நாளும் நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

2047 ல் இந்தியா உலகின் மிகப்பெரும் வல்லரசாக , பொருளாதார ஆளுமையாக வர வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். 10 ஆண்டுக்கு முன்பு இதை நாம் கூறியிருந்தால் நம்பி இருக்க மாட்டர் , நம்மை பார்த்து நகைத்திருப்பர். விரைவில் 4 வது இடத்தில் இருந்து உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உள்ளது.

உங்களை பார்க்கும் போது எனக்கு ஒரு நம்பக்கை வருகிறது. 2047 க்கும் முன்பே அந்த வளர்ச்சியை நாம் பெற்று உலகின் முதலிடத்தை பல துறைகளில் பெற்றிடுவோம் என நம்புகிறோம்.

மருத்துவர்களும் எல்லா தொழில் நுட்பத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இலக்கில்லாமல் யாரும் பயிணிக்க கூடாது. வாழ்வில் அனைவரும் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

தோல்வியை கண்டு துவளாமல் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். எதற்கும் எப்போதும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர். இறைவன் அவரவருக்கும் ஒரு தனித்திறனுடன் படைத்துள்ளார். ஒருபோதும் குறுக்கு வழியை தேடாதீர். அது மிகப்பெரும் வீழ்ச்சிக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும்.

அறம்,ஒழுக்கம் சார்ந்து செயல்படுங்கள்.

இலக்கை நோக்கி நீங்கள் தீவிரமாக பயணித்தால் ஆண்டவனால் கூட உங்கள் வெற்றியை தடுக்க முடியாது. வாழ்க பாரதம். என்றார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு,

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்தியுள்ளன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 36 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழகம்தான்.

அரசு , தனியார் கல்லூரிகள் என 76 மருத்துவ கல்லூரிகளை உள்ளடக்கியுள்ளது தமிழகம்.

பொது மருத்துவம் , பல் மருத்துவம் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 14, 750 மருத்துவ கல்வி இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

இரண்டரை கோடிக்கும் மேலான தொற்றா நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதால் ஐ.நா சபையே தமிழக அரசுக்கு விருது வழங்கியுள்ளது.என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ