குடிசைக்கு தீ வைத்த மர்ம நபர் - இருவர் உடல் கருகி உயிரிழப்பு!
திருவண்ணாமலை, 02 ஜனவரி (ஹி.ச) செங்கம் அருகே தம்பதி தங்கியிருந்த குடிசைக்கு தீ வைத்த மர்ம நபரால் இருவர் உடல் கருகி உயிரிழப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தையடுத்த பக்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (50). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சர்தார
தீ விபத்து


திருவண்ணாமலை, 02 ஜனவரி (ஹி.ச)

செங்கம் அருகே தம்பதி தங்கியிருந்த குடிசைக்கு தீ வைத்த மர்ம நபரால் இருவர் உடல் கருகி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தையடுத்த பக்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (50).

இவர் அதே பகுதியைச் சேர்ந்த சர்தார் என்பவருக்குச் சொந்தமான, ஏரிக்கரை ஓரம் உள்ள விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

அந்த விளைநிலத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டிலேயே வேலு, தனது இரண்டாவது மனைவி அமிர்தத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டை வெளியே இருந்து பூட்டிவிட்டு, குடிசைக்குத் தீ வைத்துள்ளனர்.

தீ மளமளவென பரவியதில், வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட வேலு மற்றும் அமிர்தம் ஆகிய இருவரும் வெளியே வர முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam