Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 02 ஜனவரி (ஹி.ச.)
திருச்சி ஸ்ரீகங்காநகர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (எண்:22497/22498) இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஸ்ரீகங்காநகரில் இருந்து 5-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் கூடுதலாக 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.
அதுபோல் திருச்சி - ஜோத்பூர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (எண்:20481/20482) இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஜோத்பூரில் இருந்து வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து 10-ந்தேதி முதல் 31-ந் தேதி வரையும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்படுகிறது என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b