Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.)
மெரினா கடற்கரையில், உணவுபொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்த கடைகளையும் அமைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது எனவும் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் கொடுத்து மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்குகளின் விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
என
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு உத்தரவிட்டனர்
Hindusthan Samachar / P YUVARAJ