Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 02 ஜனவரி (ஹி.ச.)
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 4 ஆவது வார்டுக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கடந்த புதன்கிழமை அன்று
குழி தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தோண்டப்பட்ட குழியில் நீரூற்று உருவாகி தண்ணீர் நிரம்பியதாகும்
கூறப்படுகிறது.
குழி பறிக்கப்பட்ட இடத்தில் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு அதனை சுற்றிலும் கம்பிகள் நடப்பட்டு துணியை சுற்றி
எச்சரிக்கை விடும் வகையில் கட்டப்பட்டிருந்ததாகும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்தத் துணி மாலை நேரத்தில் அகற்றப்பட்டதாகும் கூறப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ரதிப்பிரியா தம்பதியின் மகன் ரோகித் 4 திடீரென பாதாள சாக்கடை திட்டக்குடிக்குள் தவறி விழுந்ததாகவும்
தெரிவிக்கின்றன.
மேலும் இதனை யாரும் கவனிக்காத நிலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்
காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பகுதியில் தேடி உள்ளனர் அப்போது
பாதாள சாக்கடை திட்ட குழிக்குள் ரோகித் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்ததாகவும்
சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நாமக்கல் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டம் பணிகள் அனைத்தும் குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு விடப்பட்டதாகவும் அவ்வாறு விடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நடைபெற்று வந்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் சரிவர நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால் இதுபோல விபத்தினை தடுத்து இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழுவில் மணிகண்டன் ரதி பிரியா
தம்பதியரின் 4 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் அதற்கு இழப்பீடாக மாநகராட்சி சார்பில் 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் வழங்கினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam