Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 02 ஜனவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த நாகுபிச்சை மகன் ராஜேந்திரன் (55). மீனவரான இவர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் தங்கி இருந்து மீன்பிடி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மீனவர் ராஜேந்திரன், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ராஜேந்திரன் உயிரிழந்த தகவலை அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
கோட்டைப்பட்டினம் வந்த உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு போய் சடங்குகள் செய்ய வசதி இல்லை.
ஆகவே கோட்டைப்பட்டினத்திலேயே அடக்கம் செய்ய கேட்டுக் கொண்டனர்.
மீனவர் ராஜேந்திரனின் நிலையறிந்த கோட்டைப்பட்டினம் பகுதி இஸ்லாமிய இளைஞர்கள், ராஜேந்திரன் உடலை அடக்கம் செய்ய முன்வந்ததுடன் மீனவர் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று இந்து முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN