டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை மூடக்கோரிய வழக்கு- பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, 02 ஜனவரி (ஹி.ச.) கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை மூடக்கோரிய வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளத
மதுரை அமர்வு


மதுரை, 02 ஜனவரி (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை மூடக்கோரிய வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்,

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை மூடவும், உரிய விதிமுறைகளை வெளிப்படையாக அறிவித்து டாஸ்மாக் சில்லறை

விற்பனை கடைகளுக்கான டெண்டரை நடத்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் உத்தரவிடக் கோரியும் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு,

வழக்கு தொடர்பாக, தமிழக டாஸ்மாக் நிர்வாகத்தின் செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய

உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam