கடையநல்லூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை!
தென்காசி, 02 ஜனவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அருணாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவியான முருகசெல்வி என்பவர் இன்றைய தினம் அவரது வீட்டு கழிவறைக்குள் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த நிலையில் தகவல
Murder


தென்காசி, 02 ஜனவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அருணாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவியான முருகசெல்வி என்பவர் இன்றைய தினம் அவரது வீட்டு கழிவறைக்குள் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து சென்ற சேந்தமரம் போலீசார் முருகசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், முருக செல்வியின் கணவர் அய்யாக்கண்ணு வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதும், முருகசெல்வி மார்கழி மாத பூஜைக்கு காலையில் எழுந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், முருகசெல்வி இன்றைய தினம் காலையில் மார்கழி பூஜைக்கு வராத நிலையில், அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, முருகசெல்வி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்த நிலையில், முருகசெல்வியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளும் காணாமல் போயிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நகைக்காக முருகசெல்வி கொலை செய்யப்பட்டாரா? இல்லையெனில் வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN