Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 02 ஜனவரி (ஹி.ச.)
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்றைய தினம் துவங்கி நேற்று இரவு வரை இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து கொண்டுவரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று இரவு கோவில் நடை அடைக்கப்படும் வரை இந்த நடைமுறை அமலில் இருந்தது.
இன்று அதிகாலை துவங்கி இம்மாதம் எட்டாம் தேதி வரை ஏழுமலையான் கோவிலில் நேரடி இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இன்று முதல் டோக்கன்கள், டிக்கெட் இல்லாமல் திருப்பதி மலைக்கு பக்தர்கள் நேரடியாக வந்து இலவச தரிசன வரிசையில் சேர்ந்து ஏழுமலையானை தரிசித்து சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நேரடியாக இலவச தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையான வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்கள் சாரை சாரையாக திருப்பதி மலைக்கு வந்து கொண்டுள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam