Enter your Email Address to subscribe to our newsletters

இந்தியா, 02 ஜனவரி (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஒடிசாவை சேர்ந்த சூரஜ் என்ற வாலிபரை 17 வயதுடைய நான்கு சிறார்கள் ரயிலிலும் ரயில் நிலையத்திற்கு வெளியிலும் பட்டாக் கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு சிறார் காப்பகத்தில் அடைத்துள்ளனர் .
பாதிக்கப்பட்ட சூரஜ் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தன் சொந்த விருப்பத்தின் பெயரில் ஊருக்கு செல்வதாக கூறி எழுதிக் கொடுத்துவிட்டு சூரஜ் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
சூரஜ் தாக்கப்பட்ட வீடியோவை வைத்து பல்வேறு அவதூறு செய்திகள் சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கின.
பொதுமக்களிடையே இந்த வீடியோ அமைதியை குலைக்கும் வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி பல்வேறு தவறான கருத்துகள் சமூக வலைதளத்தில் பரவின.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என அரசு சார்பில் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு பல்வேறு கருத்துகள் வெளியான காரணத்தினால் தமிழக சைபர் கிரைம் டிஜிபி சந்தீப் மிட்டல் x வலைதள நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தின் நோடல் அதிகாரியான தாம் இந்த நடவடிக்கையை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தரப்பில், திருத்தணி விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை அதிகாரி வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் சில எக்ஸ் சமூக வலைதள பக்கங்கள் வன்முறையை தூண்டும் விதமாக பதிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுகள் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் மேலும் காட்டி , தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் 22 சமூக வலைதள பக்க பதிவுகள்முடக்கப்பட வேண்டும் என தமிழக சைபர் கிரைம் டிஜிபி சந்திப் மிட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
22 பக்கங்களின் முகவரியை குறிப்பிட்டதோடு மட்டுமல்லாது இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் முடக்க தவறினால் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு அடிப்படையில் x கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மீது சட்டபூர்வX கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சந்தீப் மிட்டல் தனது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam