Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.)
சென்னை அடுத்த பாடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் என்.ஆர் தனபால் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து
தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர் ராஜன் பேசியதாவது;
வைகோ நடைபயணத்தை போதைக்கு வழி செய்பவரே துவக்கி வைப்பது எப்படி சரியாகும்.
அத்தனை சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் காரணம் போதை தான். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என கூறும் வேளையில் கஞ்சா வைத்திருப்பவர் கைது என செய்தி வருகிறது.
அண்ணன் வைகோ அறிவாலயதிற்கு தான் நடைபயணம் செல்ல வேண்டும் தமிழ்நாட்டில்
நடைபயணம் செல்லாமல் அறிவாலயத்திற்கு தான் செல்ல வேண்டும். போதை இல்லா தமிழகம்
டாஸ்மாக் இல்லாத தமிழகம் என்பதை வலையுறுத்தி அறிவாலயம் தான் செல்ல வேண்டும்.
இந்த வயதில் வைகோ நடைபயணம் மேற்கொள்வது வியப்பாக உள்ளது. நடைபயணம் சென்றுதான் சொல்ல வேண்டும் என இல்லை துவக்கி வைக்கும் முதல்வர்தான் அதை கட்டுப்படுத்த வேண்டும். இருப்பதை விட்டு விட்டு நடைபயணம் செய்து எதை வலையுறுத்த போகிறீர்கள்.
தமிழகத்தில் கஞ்சா போதை அதிக அளவில் நடமாடி கொண்டு இருக்கிறது. மறுவாழ்வு மையம் துவங்கப்பட வேண்டும்.
முதல்வரிடம் கோரிக்கை வைத்து டாஸ்மாக் கஞ்சாவை ஒழிக்க கோரிக்கை வைக்க வேண்டும்.
போதையை கட்டுபடுத்தி இருக்கோம் என முதல்வர் கூறும் கருத்து ,அதிகார பூர்வமாக உண்மை இல்லை. அனைத்து இடங்களில் கஞ்சா கிடைக்கிறது.
திருத்தணி விவகாரத்தில் சிறார்கள் போதையில் இல்லை என்பதை நம்ப
முடியாது,போதையில் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அண்ணன் வைகோ அநாவசியமான நடைபயணத்தில் உடலை வருத்தி கொள்ள வேண்டாம் அறிவாலயதிற்கு சென்று வலியுறுத்தினாலே கட்டுப்படுத்தப்படும் என்பது என் கருத்து.
சேகர்பாபு என்னிடம் நடந்துகொண்ட விதம் மிக மிக தவறு. நான் ஒரு பக்தையாக தான்
கோவில் உள்ளே சென்றேன். அமைச்சர் சேகர் பாபு வாட்ச்மேன் போல நின்று கொண்டு நீ
போகாதே என கூறுவது அறநிலையத்துறை அமைச்சரின் வேலை அது கிடையாது என காட்டம்.
உங்களையே இப்படி மிரட்டுகிறார் பொதுமக்கள் எங்களை எப்படி நடத்துவார் என பொதுமக்கள் என்னிடம் புகார் கூறினார்கள். கோவில் அவர்களின் சொத்து கிடையாது.
நான் இரண்டு மாநில ஆளுநராக இருந்த போது முழு பாதுகாப்பு கோவிலுக்குள் யாரும்
இருக்க கூடாது என இருந்த போதும் நான் வருகிறேன் என்பதற்காக பொதுமக்களை வெளியே
அகற்றி சாமி கும்பிட்டது கிடையாது.பொதுமக்களுடன் தான் சாமி கும்பிடுவேன் என எனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் கடுமையாக கூறி இருக்கிறேன்.
ஆளுநராக இருந்தபோதே அதையெல்லாம் கடைப்பிடிக்காமல் இருந்துள்ளேன் இப்படி இருக்கும் என்னை ஒருமையில் பேசியது எப்படி சரியாகும்.
நான் பக்த்தையாக தான் போனேன். அறநிலையத்துறை அமைச்சர் பணிவாக இருக்க வேண்டும்
என்பதைவிட பண்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
விக்டோரியா மாளிகை கட்டணம் வசூலிக்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு,
டாஸ்மாக்கில் பாட்டிலும் 10 ரூபாய்,அரசு பதவிக்கு பல லட்சம்,விக்டோரியா
மஹாலுக்கு பணம், இவர்கள் பணம் பணம் பணம் என சொல்லி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam