பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியின் ஒரு சில பகுதிகளுக்கு நாளை மின்தடை அறிவிப்பு
திருச்சி, 02 ஜனவரி (ஹி.ச.) திருச்சி மாவட்டம் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை(03-01-2026) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் மின்தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியின் ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு


திருச்சி, 02 ஜனவரி (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை(03-01-2026) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்

மின்தடை ஏற்படும் இடங்கள் :

அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், அரியமங்கலம் தொழிற்பேட்டை, சிட்கோ காலனி, ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர்.நகர், ராணுவ காலனி, விவேகானந்தா நகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கீழக்குறிச்சி, ஆலத்தூர், மகாலெட்சுமி நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், திருநகர், நத்தமாடிப்பட்டி, பொன்மலை, காட்டூர், கைலாஷ் நகர், சக்தி நகர், சந்தோஷ்நகர், பாப்பாக்குறிச்சி, பாலாஜிநகர், விண்நகர், அம்மன் நகர், ராஜராஜேஸ்வரி நகர், கணேஷ்நகர், எல்லக்குடி, செந்தண்ணீர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b