பாகிஸ்தான் ஆஸ்திரேலியா டி20 தொடர் - 17 வீரர்கள் அடங்கிய அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு
மெல்போர்ன், 20 ஜனவரி (ஹி.ச.) பாகிஸ்தானின் லாகூரில், இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டத்துக்காக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா 17 வீரர்களைக் கொண்ட ஒரு அணியை அறிவித்துள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இ
பாகிஸ்தான் ஆஸ்திரேலியா டி20 தொடர் - 17 வீரர்கள் அடங்கிய அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு


மெல்போர்ன், 20 ஜனவரி (ஹி.ச.)

பாகிஸ்தானின் லாகூரில், இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டத்துக்காக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா 17 வீரர்களைக் கொண்ட ஒரு அணியை அறிவித்துள்ளது.

பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்டமான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்காக இந்த அணிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த ஆட்டத்தில் மோதுகின்றன.

ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெறும் இந்த அதிரடி டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 அணி வீரர்கள் விவரம்:

மிட்செல் மார்ஷ் (தலைமை வீரர்), சீன் அப்போட், சேவியர் பார்த்லெட், மஹ்லி பியர்ட்மேன், கூப்பர் கோனோலி, பென் துவார்ஷுயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குனேமன், மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.

இதில், டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் முக்கியமான 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், காயம் காரணமாக பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிம் டேவிட் ஆகிய 3 பேர், உடல் தகுதியை சீராக்கும் பொருட்டு அணியில் இடம்பெறவில்லை.

மேலும், உலக கோப்பை தொடரை மனதில் வைத்து நட்சத்திர ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM