Enter your Email Address to subscribe to our newsletters


உளுந்தூர்பேட்டை, 20 ஜனவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாரதா ஆசிரமம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சேகர் என்பவர் லாரியில் தோல் ஏற்றுக்கொண்டு திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென சேகர் சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் வாகனத்தை மோதி சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகனத்தை கவிழ்த்து விட்டார்.
பின்னர் சிறிது நேரம்கழித்து ஸ்ரீராஜலட்சுமி டிராவல்ஸ் வாகனம் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று சம்பவ இடத்தில் கவிழ்ந்துள்ள லாரியில் மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
அதன் பின்னால் வந்த SBM டிராவல்ஸ் பஸ் அதற்குப் பின்னால் வந்த ACLS டிராவல்ஸ பேருந்து ஸ்ரீராஜலட்சுமி டிராவல்ஸ் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ACLS டிராவல்ஸ் பயணித்த எட்டு நபர்களும் மற்றும் 2 பேருந்து ஓட்டுனர்கள் காயம் ஏற்பட்டு உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பாத்திமா பேகம் என்பவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J