Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.)
2026 சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழகத்தின் அணைத்துக் கட்சிகளும் அதற்காக களப்பணி ஆற்றி வருகின்றன.
ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினை அண்மையில் அமைத்தது. அக்குழுவினர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று (ஜனவரி 20) மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் பணி தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி, பரப்புரை வியூகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும் மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b