Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 20 ஜனவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் ஆஞ்சநேயர் கோயில் அருகே ஆற்று திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில்,ராட்சத பலூனுக்கு காற்று ஏற்றும் சிலிண்டர் வெடித்ததில் பெண் உட்பட
4 பேர் உயிரழந்தனர்.
மேலும்,13 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குறித்த முழுதகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த மணலூர் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4-பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஒருவர் தான் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக அவர் தெரிவித்ததாவது ,
சிலிண்டர் வெடிப்பு விபத்தில் கலா என்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / Durai.J