ஜேஇஇ முதன்மை தேர்வு நாளை முதல் தொடக்கம்
புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.) இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை, ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெற
JEE Main exam begins


புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.)

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும்.

இவை, ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில், முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2026-27ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு நாளை(ஜனவரி 21) தொடங்கி ஜனவரி 30ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ கடந்த ஜனவரி 18 ஆம் தேதி இரவு வெளியிட்டது. அதை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b