Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 20 ஜனவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நேற்று ஆற்றுத் திருவிழாவின் போது பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் வேங்கயவெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் 18 பேர் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்று திருவிழாவின்போது மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பலூன் கடை உரிமையாளரான திருவண்ணாமலை மாவட்டம் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN