Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.)
தேசம் முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும்போது, குறைவான தொகையை செலுத்தி பயணிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள், 2008 ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகளின்படி கட்டுப்படுத்தப்படுகின்றன. விதி 11ன் படி, ஒரு சில வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் சில வரையறுக்கப்பட்ட தகுதிகளின் கீழ் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
மேலும், விதி 9ன் கீழ், சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் வர்த்தக நோக்கமற்ற வாகன உரிமையாளர்களுக்கு மாதாந்திர பாஸ்கள் மற்றும் மாவட்ட அளவிலான தள்ளுபடிகள், அவர்களின் தகுதியின் அடிப்படையில் குறைக்கப்பட்ட கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.
எனவே, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைவரும் அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், உரிய தகுதி இருந்தால் மட்டுமே கட்டண விலக்கு அல்லது தள்ளுபடி பெற முடியும்.
எல்லா பயனர்களும் சமமாகவும், வெளிப்படையான முறையிலும் எந்தவித இடையூறும் இன்றி பயணிக்க சுங்கச்சாவடி ஊழியர்களுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM