Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 20 ஜனவரி (ஹி.ச.)
சபரிமலை திருத்தலத்தில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி மாலை சந்நதி திறக்கப்பட்டு, டிசம்பர் 27-ம் தேதி இரவு அடைக்கப்பட்டது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதி மாலை சந்நதி மீண்டும் திறக்கப்பட்டு மகர விளக்கு கால திருவிழா இனிதே ஆரம்பமானது.
ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜனவரி 18-ம் தேதியுடன் நெய் அபிஷேகம் பூர்த்தி அடைந்தது.
நேற்றைய தினம் மாளிகைபுரம் மணிமண்டபத்தின் அருகே குருதி பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பக்தர்களின் தரிசனம் நிறைவுக்கு வந்தது.
மகரஜோதி தரிசனத்திற்கு பிறகும் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது ஒரு சிறப்பம்சமாகும்.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு சந்நதி திறக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட விசேஷ பூஜைகளுக்குப் பின்னர், காலை 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதியின் முன்னிலையில் சந்நதி அடைக்கப்பட்டது.
மாசி மாத சிறப்பு வழிபாடுகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் சந்நதி திறக்கப்படும்.
Hindusthan Samachar / JANAKI RAM