சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை
சென்னை, 20 ஜனவரி (ஹி.ச) சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கேரளாவில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலை துவார பாலகர் சிலையின் தங்க தகடுகள் திருடப்பட்டது தொடர்பாக சிறப்பு
Sabarimala


சென்னை, 20 ஜனவரி (ஹி.ச)

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

கேரளாவில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சபரிமலை துவார பாலகர் சிலையின் தங்க தகடுகள் திருடப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு இதுவரை சுமார் 10 பேரை கைது செய்துள்ளது.

அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்துகிறது.

சபரிமலை தங்க திருட்டு வழக்கு தொடர்பாக சென்னையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சபரி மலை கோயில் தங்கம் கொள்ளை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ் நாடு என மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை அம்பத்தூர் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி சபரிமலை தங்க திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டார்

இந்த நிறுவனத்தில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னையில் அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் சோதனையில் இருந்து வழக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ