Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.)
2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுடன் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார்.
அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து கலைஞர் சம்பந்தமான ஒரு புத்தகத்தை கொடுத்து வரவேற்பு அளித்தார்.
அவரை தொடர்ந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மலர் கொடுத்து புத்தகத்தை பரிசாக வழங்கி வரவேற்றார்.
அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது.
அப்போது பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.
ஆனால், சட்டப்பேரவை மரபை சபாநாயகர் அப்பாவு எடுத்து கூறிய போது அதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை சட்டமன்றத்தில் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளைப் போல் இம்முறை 4-வது ஆண்டாக அவர் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b