Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 20 ஜனவரி (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது விஜயபாஸ்கருக்கு அதிமுக நிர்வாகிகள் காளை கன்றை பரிசாக வழங்கி சிறப்பித்தனர்.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது;
அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி மட்டுமல்லாமல் யார் யார் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அனைவரும் வரும் 23 ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் இடம் பெறுவார்கள்.
2026 தேர்தலுக்கான மிகப்பெரிய வியூகத்தை எடப்பாடியார் வகுத்துக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலை ஆட்சி அமையும்.
26 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி முதலமைச்சராக பதவியேற்பது உறுதி.
அதிமுக அமைதியான சாத்வீகமான கட்சி, அகிம்சை வழியில் செல்லக்கூடிய கட்சி. அராஜகத்தை வார்த்தையின் அளவீடுகளை கண்ணியமிக்க வார்த்தைகளோடு வருகிறதா, தவறான வார்த்தைகள் வருகிறதா என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. நடை போட்டு வரும்போது எடை போடக் கூடியவர்கள் வாக்காளர்கள். அவர்களின் மனதை நாம் தொட வேண்டும்.
அண்ணா திமுக ஒரு நிறைகுடம் எந்த காலத்திலும் தழும்பாது, நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்த நன்மையையும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிகள் முடிவில் விஜயபாஸ்கருக்கு மிகப் பிரமாண்ட ரோஜா பூ மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam