Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் இருக்கும் மருத்துவர், சிறப்பு மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீஷியன், இதர மருத்துவப் பணிக்கான காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், 2026 ஆண்டிற்கான செவிலியர் உதவியாளர் கிரேடு - II பணிக்காக மொத்தம் 999 காலிப்பணியிடங்கள் நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செவிலியர் உதவியாளர் பயிற்சி சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் இது எழுத்துத் தேர்வின்றிய தகுதி அடிப்படையிலான தேர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு www.mrb.tn.gov.in என்ற இணைத்தளத்தில் மட்டுமே பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கேட்டுகொண்டு உள்ளது.
பட்டியலினத்தவர்களுக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணமாகவும் மற்றவர்களுக்கு ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடக்கம் ரூ.17,500 முதல் ரூ.58,100 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b