Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 03 ஜனவரி (ஹி.ச.)
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 40000 கோயில்கள் நிர்வாகம் செய்யப்படுகின்றன.
இதில் அமைச்சராக இருக்கும் சேகர்பாபு சுசீந்திரத்தில் பக்தர்கள் நோக்கி தரக்குறைவாக பேசி உள்ளார்.
அதேபோல் திருச்செந்தூர் கும்பாபிஷேகத் தன்று பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்த சூழ்நிலையில், பக்தர்களை நோக்கி திருப்பதியில் மட்டும் காத்திருக்க முடிகிறதா எனவும் திருவல்லிக்கேணியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதே சேகர்பாபு அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கிறார்.
அங்கு அவர்களிடம் இது மாதிரி தர குறைவாக பேசுவதில்லை.
ஆனால் இந்து கோவிலுக்கு வந்தால் மட்டும் பக்தர்களின் நோக்கி தரக்குறைவாக பேசி வருகிறார்.
முதலமைச்சர் இது குறித்து சேகர்பாபுக்கு அறிவுரை கூற வேண்டும்.
இந்து கோவில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் சமீபத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கத்தில் 5000 ,4000, 3000 என ஒவ்வொரு நிலைக்கு ஏற்றவாறு வசூல் செய்யப்பட்டு உள்ளது.
எனவே கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் பக்தர்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் சேகர பாபு அவர்கள் மன்னிப்பு கூறவேண்டும்.
மன்னிப்பு கூறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் அறவழியில் போராட்டங்கள் நடத்தப்படும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்தார்.
Hindusthan Samachar / Durai.J