Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 03 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாநகரில் மிக பழைமையான சிவன் கோயிலாக அறியப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயிலில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு, திருவாதிரை திருவிழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை, நடன தீபாராதனை நடைபெற்றது.
10 நாள்கள் நடைபெறும் விழாவில், தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (ஜனவரி 03) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு திருவனந்தல் தொடர்ந்து ஸ்ரீ நடராஜ மூர்த்தி சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 4.30 மணிக்கு காலசந்தி 6.15 மணிக்கு தீபாரணை நடைபெற்றது. அதன் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ நடராஜமூர்த்தி சிவகாமி அம்பாளுக்கு அலங்கார தீபாரணை நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான புத்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் சண்முகம் ஆகியோர் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடராஜமூர்த்தி சிவகாமியம்மாள் ரத வீதி வளம்வந்து நடன சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b