Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 ஜனவரி (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களை கவரும் நோக்கில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில்,2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் நத்தம் விசுவநாதன், பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, செம்மலை, CV சண்முகம், ஓ எஸ் மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், RB உதயக்குமார், வைகைசெல்வன் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் அதற்கான பயண திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் விதமாக மாணவர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், சிறு குறு தொழில் நிறுவனங்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து கருத்துகளை கேட்டு பெற திட்டமிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ