Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம்வரும் அவனியாபுரத்தில் ஜனவரி 15 பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதையொட்டி இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது.
இந் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்காள் பாசன விவசாயிகள் சங்கம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
அதில் இரு தரப்பினர் இடையே எந்தவித சமரசம் நடவடிக்கையும் ஏற்படவில்லை.
அதனை தொடர்ந்துஇந்த ஆண்டு மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியினை ஏடிஜிபி மகேஸ்வரர் தயாள் மற்றும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் பகுதி கால்நடை பரிசோதனை மையம் இடங்களை ஆய்வு செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b