Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 03 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பட்டாகத்தியுடன் 3 வாலிபர்கள் வீடியோ மற்றும் ரீல்ஸ் வெளியிட்டனர்.
இது குறித்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி., தனிப்படையினர் மற்றும் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம், சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட, வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலகுண்டு சென்றாய பெருமாள் கோவில் மலை அடிவாரம் பகுதியில் பதுங்கி இருந்த கட்டகாமன்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் விஜயகுமார் (23), பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த சேகர் மகன் சந்தனகுமார் (20), துரைப்பாண்டி மகன் துரைஅரசு (19) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 3 பட்டாகத்திகளையும், அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வத்தலகுண்டுவில் பட்டாகத்தியுடன், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் வீடியோ வெளியிட்டு, 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN