Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 03 ஜனவரி(ஹி.ச.)
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் என்ற பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது,
மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் என்ற திட்டத்தின் கீழ், பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.
இதில் பெண்கள் தொழில் துவங்குதல், வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட உதவிகளை எப்படி ? பெறுவது என விளக்கப்படுகிறது.
கோவை அதிக தொழில் வாய்ப்பு தரும் மாவட்டமாக உள்ளது.
பெண்கள் தொழில் துவங்க மற்ற இடங்களை விட உகந்த இடமாக கோவை உள்ளது. அதிக பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பது எங்கள் குறிக்கோள்.
அடுத்தகட்டமாக ஆயிரக் கணக்கான பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதும், இருக்கும் தொழில் முனைவோர்களுக்கும் உதவுவது எங்கள் நோக்கம். மத்திய அரசு திட்டங்கள் மூலம் பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
பாரத மாதா கி ஜெ என்றால் பாரத அன்னையை வணங்குவோம் என்பது தான் அர்த்தம்.
இதில் மதவெறி வரவில்லை. பாரத மாதா கி ஜெ என நாட்டிற்காக போராடிய லட்சக் கணக்கான தொண்டர்களை கெச்சைப்படுத்த அமைச்சர் சேகர்பாபு நினைக்கிறார் ? என்று கேள்வி எழுப்பியவர், நாட்டை தாயாக வணங்குவது நமது நாட்டின் பாரம்பரியமாக உள்ளது.
பாரத மாதா கி ஜெ என்பது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கோஷம் அல்ல. தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் கோஷமும் கூட. அதற்காக காங்கிரஸ் கட்சியை தி.மு.க கண்டிக்குமா ? அமைச்சர் சேகர் பாபுவின் குறுகிய எண்ணம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் வார்த்தையாக வெளிப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக, அக்கட்சியினர் கருத்துக்களை தெரிவிப்பது வரவேற்கத்தக்கது.
மாநிலத்தின் அப்பா என்ற முதலமைச்சர் தனது பொறுப்பை விட்டால் எப்படி? முதலமைச்சர் தன் பொறுப்பை மத்திய அரசு, பெற்றோர்கள் மீது போட்டு தப்பிக்க பார்க்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. மிக மோசமாக இளைஞர்கள் செல்ல அரசும் ஒரு காரணம்.
முதலமைச்சர் தனது தோல்வி வெளியே தெரிந்துவிடும் என்பதால் மத்திய அரசு மீது பழி போடுகிறார்.
மன, உடல் பாதிப்பை மட்டுமின்றி போதை சமூக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதற்கு அரசு தோல்வி தான் காரணம். இதற்கு முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
போதைப்பொருள் தடுப்பிற்கு மாநில போலீஸ் என்ன செய்கிறது ? மத்திய ஏஜென்சிகள் தங்களது பணியை செய்து வருகின்றன.
டாஸ்மாக் போதை எல்லாம் போதை இல்லையா ? டார்கெட் வைத்து விற்பனை செய்வது போதையை ஊக்குவிப்பது இல்லையா ? வடமாநில தொழிலாளர்கள் மீது சமுதாயத்தில் முக்கிய இடத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் வெறுப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் அவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்.
வடமாநில தொழிலாளர் பிழைப்பிற்காக வந்து உள்ளார்கள். அவர்கள் இல்லாமல் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் நடத்த முடியாது
வட மாநில தொழிலாளர் மீது வெறுப்பு ஏற்பட தமிழக அமைச்சர்களின் பேச்சும் ஒரு காரணம்.
2024 ல் கோவைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை பல்வேறு திட்டங்கள் வாயிலாக கொடுத்தார். அதிக வங்கி கடன் தொகை கோவை மாவட்டத்திற்கு தான் வழங்கப்பட்டது.
பொருத்தமானவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. வங்கி கடன் பெற நாங்கள் உதவி செய்து வருகிறோம்.
தொடர்ச்சியாக தமிழகம் போராட்ட களமாக மாறிக் கொண்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு எதிர் கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது அளித்த வாக்குறுதி என்ன ஆனது என கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு, அரசு ஊழியர்கள் கிரிமினல் குற்றவாளி போல கையாள்கிறார்கள்.
சாதாரண மக்கள் அரசு மீது கோபத்தில் உள்ளார்கள். அரசு ஊழியர்களுக்கு அதைவிட அதிக கோபம் உள்ளது.
கோவை செம்மொழி பூங்காவை இன்னும் பார்க்கவில்லை. அதில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
பராசக்தி, ஜனநாயகன் ஆகிய படங்களில் எந்த படத்தை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு,
இந்த படம் என இல்லை நேரம் இருந்தால்,படம் நன்றாக இருப்பதாக சொன்னால் பார்க்கலாம் என பதிலளித்தார்.
Hindusthan Samachar / Durai.J