Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 03 ஜனவரி (ஹி.ச)
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
கம்யூனிஸ்ட் தேசிய தலைமைகள் மாநிலச் செயலாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் மாணிக்கம் தாகூர் தடித்த
வார்த்தைகளை சொல்லியது கண்டனத்துக்குரியது
தெர்மாகோல் விட்டு உலக அளவில் பேமஸ் ஆனதால் மீண்டும் பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என அதிமுக செல்லூர் ராஜு சொல்லி இருப்பாரோ என்னவோ?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயன நிகழ்ச்சிக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறுவது தவறானது.
4 ந் தேதி விராலிமலையில் நடைபெறும்நடைபயனத்தில் பங்கேற்க உள்ளோம்.
ஜோதிமணி கூறிய கருத்துக்கு உட்கட்சி பிரச்சினை அதில் தலையிட விரும்பவில்லை.
கரூர் சம்பவம் பிறகு பிஜேபி என்ற கொள்கை எதிரி என எதிர்த்து வந்த விஜய் பாஜக எதை செய்தாலும் அதை பற்றி எந்த கருத்தும் செல்லாமல் மௌனம் சாதிக்கும் அணுகுமுறை கரூர் பின் மேற்கொண்டு இருக்கிறார்.
சிபிஐ விசாரணை நடந்து வருவதால் ஒன்றிய அரசை பகைத்துக் கொண்டால் தனக்கு எதிராக போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அத்தகைய நிலைபாடு அவர் எடுத்து இருக்கிறாரோ என்று தெரியவில்லை.
100 நாள் வேலை திட்டம் ரத்து தொழிலாளர் தொகுப்பு சட்டம் நான்கு
விதைகள் சட்டம்-2025 மின்சார திட்டம் தொடர்பாக எந்தவித கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.
கொள்கை எதிரி என பிஜேபி என சொல்லியதை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக
எதிர்க்கவில்லை.
விவசாயிகளுக்கு விரோதமாக இருந்து கொண்டு மோடி அரசு மோடி பொங்கல் விழா
கொண்டாடுவது இந்த வருட சிறந்த ஜோக்.
திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படுத்தவில்லை. ஜனநாயக முற்போக்கு கூட்டணி மிக வலிமையாக உள்ளது. அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடிக்க கூடிய கூட்டணியாக உள்ளது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் மகத்தான வெற்றியை கூட்டணி பெறும்.
வட மாநில இளைஞர் தாக்கப்பட்டது தொடர்ந்து ரயில் நிலையங்கள் ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
தாக்குதல் காயமடைந்த வடமாநில இளைஞர் சுராஜ் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உரிய
இழப்பீடு வழங்கிட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
டெல்லியில் நண்பர்களாக இருக்கும் கேரளாவில் பாசாங்கு செய்யும் இடதுசாரி முடிவுக்கு வரும் சொல்லிய மோடி கேரளாவில் மூன்றாவது முறையாக இடதுசாரி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam