14 வயது சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவர் போக்சோவில் கைது!
சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.) சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் அப்பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவனிடம் பேசி தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவரும்
Homosexual Abusive


சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் அப்பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவனிடம் பேசி தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் மாறி மாறி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக சிறுவனிடம் இதுபோல் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என்பதால் அந்த சிறுவனுக்கு அவ்வப்போது சிறுவனுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் கேம் விளையாட செல்போன் கொடுத்ததும் மட்டுமல்லாமல் செல்போன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வந்துள்ளார்.

மகனின் உடல்நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகனிடம் பெற்றோர் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து மொய்தீன், ஜாபர் சாதிக் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN