Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)
வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைமை அமைத்தது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், டிகேஎஸ் இளங்கோவன், எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் (ஓய்வுபெற்ற ஐஏஎஸ்), சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக சமீபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.
இந்தக் குழு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளில் அதிரடியாக இறங்கியுள்ளது. வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்க திட்டமிட்டுள்ள திமுக, இதற்காக ஒரு பிரத்யேக மொபைல் செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 03) தொடங்கி வைத்தார். திமுக தேர்தல் அறிக்கை குழுவின் செயலி, வாட்ஸ்ஆப் எண், சமூக வலைதளங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
ஆலோசனைகளை தெரிவிக்க 0806946900 என்ற எண்களிலும் dmkmanifesto2026@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் http://www.dmk.in/ta/manifesto2026 என்ற வலை தளங்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, இந்த செயலி வழியாக வரும் கருத்துகளை ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் எனவும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b